மகிந்த ஜனாதிபதியாக வந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக மாறியிருக்கும்: சம்பந்தன் எம்.பியின் மேதின உரை

314

 

இந்த நாட்டில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக அமர்ந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக இருந்திருக்கும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் �ஒன்றுபட்டு உரிமையை வெல்லுவோம்� என்ற தொனிப்பொருளில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஜனநாயகம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. பாராளுமன்றத்தின் சுதந்திரம், கௌரவம் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது.

நீதித்துறையின் கௌவரம், சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுயாதீனமாக செயற்பட வேண்டிய நிறுவனங்களின் சுதந்திரம் காக்கப்பட்டுள்ளது. மக்களின் இறைமைக்கு மதிப்புக் கொடுக்கப்பட்டுள்ளது  என அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE