மகிந்த தலை குனிந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் செயற்பட முடியாவிட்டால் வெளியேறவும் – சந்திக்ரிகா

285
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விரும்பமென்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து தலை குனிந்து செயற்படமுடியும், அவ்வாறு செயற்பட முடியாவிட்டால் வெளியேறவும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்களை அழைத்து கொண்டு செயற்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அசைக்க முடியாது.

மகிந்தவிற்கு விருப்பமென்றால் அமைதியாக தலை குனிந்து தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் செயற்பட முடியும் அதற்கான சந்தர்பத்தையும் வழங்க முடியும்.

மகிந்தவிற்கு அவ்வாறு செயற்பட முடியாதென்றால் உடனடியாக கட்சியை விட்டு வெளியேறவும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE