மகிந்த வெற்றிக்கு பலிகொடுக்கப்பட்ட தமிழ் பெண்கள்

488

 

மகிந்த படுதோல்வி தழுவிக்கொண்ட ஜனாதிபதி தேர்தலில் எப்பாடுபட்டாவது வெற்றிபெற மகிந்த குடும்பம் முயன்றது அதில் சாத்திரம் பலி பூசை என செய்து வெற்றிகொள்ள முயன்ற மகிந்த இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களை நரபலி கொடுத்து பலி பூசை செய்தால் வெற்றி கிட்டும் என்ற ஜோதிடர்களின் ஆலோசனைப்படி 100க்கும் மேற்பட்ட பெண்களை பலியிடப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதை மெய்ப்பதுபோல் முன்னர் இராணுவத்தில் இணைந்த பெண்கள் தாங்கள் இருந்த இடத்தில் சத்தங்கள் கேட்டதாக கூறியதும் மற்றும் சில தமிழ் பெண்கள் மர்மமான முறையில் இறந்து சடலங்கள் வந்ததையும் குறிப்பிடலாம் .

தற்பொழுதுகசிந்துள்ள இந்த தகவல் ஈழத்து தமிழர்களை பீதியடைய வைத்துள்ளது
அத்துருகிரிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற விமான விபத்து ஜனாதிபதித் தேர்தலுக்கு கொடுக்கப்பட்ட நரபலியாக இருக்கலாம் என த இன்டிபென்டன்ற் என்ற இணையத்தளம் சந்தேகம் கிளப்பியுள்ளது. 2009ம் ஆண்டு நடந்த இதேபோன்ற விமான விபத்து ஒன்றையும் சுட்டிக்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-அத்துருகிரிய பிரதேசத்திற்கு அருகில் அண்மையில் விமானப்படைக்கு சொந்தமான அண்டனோவ் 32 ரக விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது. விபத்தில் நான்கு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் பனமூட்டம் என தற்போது கூறப்பட்டாலும் விசாரணைகள் மூலம் அது எப்படி நடந்தது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த விபத்து தொடர்பான பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.

வதந்திகள் எப்படியாக இருந்தாலும், 2009ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் இதே போன்ற விமான விபத்து ஏற்பட்டது. அதிலும் நான்கு பேர் பலியாகினர். மத்தள விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் தினத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. புத்தள படல்கும்புர பிரதேசத்தில் 2009 நவம்பர் மாதம் 27ம் திகதி எம்.ஐ.24 என்ற தாக்குதல் ஹெலிக்கொப்டர் விபத்துக்கு உள்ளானதுடன் அதன் பிரதான விமானியான ரொஹான் பெர்ணாந்து உட்பட 4 பேர் பலியாகினர்.
a44bfe47c7d2dfad96a120c0811fe84e (1) blogger-image-1132717676 blogger-image-1955320258

இந்த விமான விபத்துக்கான காரணம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனினும் இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்தனர். ஆனால், இயந்திர கோளாறு இருப்பதாக கூறப்படும் இந்த ஹெலிக்கொப்டர் மத்தளயில் நடைபெற்ற வைபவத்திற்காக பலவந்தமாக பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்தது. ஹெலிக்கொப்டரில் இயந்திர கோளாறு இருப்பதால், மத்தளவிற்கு செல்லும் சந்தர்ப்பம் இருக்காது என பிரதான விமானியான ரொஹான் பெர்ணாந்து சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் 10.34 அளவில் தனது செல்போன் மூலம் குருணாகலில் இருக்கும் அவரது காதலியான சுமுது என்ற பெண்ணிற்கு தெரியப்படுத்தியிருந்தார்.
தொடர்புகள் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தொலைபேசிகளும் ரொஹான் பெர்ணாந்துவின் பெயரில் இருந்ததால், உண்மையான தகவலை மறைக்க முடியாது போனது. எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளும் வைபவம் ஒன்றிற்காக இயந்திர கோளாறு உள்ள ஹெலிக்கொப்டர் யாருடைய உத்தரவில் அனுப்பி வைக்கப்பட்டது என்பது இன்றும் இரகசியமானதாகவே உள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக பாதுகாப்பு தரப்பும் இராணுவப் பேச்சாளரும் ஊடகங்களுக்கும் நாட்டுக்கும் முதலில் பொய்யான தகவலை வழங்கினர்.

குறித்த விமான விபத்தில் கொல்லப்பட்ட இரண்டு விமானிகள் வன்னி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட திறமையான விமானிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வடக்கில் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கத்தை இந்த விமானிகளே கொழும்புக்கு எடுத்து வந்ததாக சில பத்திரிகைகள் அப்போது மேற்கொண்ட புலனாய்வு ரீதியிலான செய்தி சேகரிப்பில் தெரியவந்தது.
இப்படியான சூழ்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடத்தப்பட உள்ள நிலையில், முன்னர் நிகழ்ந்தது போல், மீண்டும் ஒரு விமான விபத்து தற்போது நிகழ்ந்திருப்பது தேர்தலுக்காக பேராசைக் கொண்ட பூதம் எடுத்த நரபலி போல் அமைந்துள்ளதாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
SHARE