மக்களுக்கு ரணில் கொடுக்கப்போகும் பரிசு

20

 

ரணில் விக்ரமசிங்க விசேட பரிசு ஒன்றை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி மக்களுக்கு ரின் ஒன்றை அவர் பரிசாக வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்றையதினம் (17) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ரணில் கொடுக்கப்போகும் பரிசு
‘அடுத்த வருடம் அனைவருக்கும் அரசாங்கம் என்ன கொடுக்க போகிறது.ரின் (TIN) ஒன்றை கொடுக்க போகிறது. Tax Identification Number (TIN).அதிபர் ரணில் விக்ரமசிங்க 2024 ஆம் ஆண்டில் அனைவருக்கும் ரின் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

ஒன்றும் செய்ய முடியாது
அந்த ரின் இல்லாவிட்டால் வங்கி கணக்கு ஒன்றை கூட திறக்க முடியாது. காணி ஒன்றை வாங்க கூட முடியாது. இதுதான் இவரின் பங்களிப்பு. ‘ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE