இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் சக்திக்கு முன்னால் அரசாங்கத்தின் சகல திட்டங்களும் தவிடு பெடியாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சக்தி இப்படி எழுச்சி பெற்று எழும் என்று அரசாங்கம் எந்த விததிலும் எதிர்ப்பார்த்திருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
இம்முறை தேர்தலிலும் அரச வளங்களை அதிகளவில் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சித்தது.
அதற்காக சில் துணிகள், புத்தர் சிலைகள் உட்பட பல பொருட்களை அரசாங்கம் விநியோகித்து மக்களின் நிலைப்பாடுகளை மாற்ற முயற்சித்துடன் அதற்கு அரசாங்கம் அரச ஊடகங்களையும் பயன்படுத்தியது.
ஜனாதிபதித் தேர்தல் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இறுதி வரை அரசாங்கத்தின் சவால்களை எதிர்கொண்டு தேர்தல்கள் ஆணையாளர் தனது கடமையை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டதாகவும் கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.