மட்டக்களப்பில் மீண்டும் ஒரு “துரோகம்” சேயோன் இருட்டில் கோட்டாவுடன்

410

 

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ அவர்களை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்பதில் இராணுவ புலனாய்வு பிரிவு தீவிரமாக செயற்பட்டனர்.

இவ்வேளை மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவராக செயற்பட்ட கி.சேயோன் இரகசியமாக இராணுவ புலனாய்வு பிரிவினருடன் தொடர்பாகி இருந்தார். இவர் முன்பு கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் போதே இராணுவ புலானய்வு பிரிவின் தொடர்பை பெற்றுக் கொண்டார்.

இவரது தேர்தல் பிரச்சாரத்தில் இராணுவ புலனாய்வு பிரிவில் மாதாந்தம் பணம் பெற்றுக் கொண்ட இளைஞர்களே செயற்பட்டனர். இது சந்திவெளி மக்கள் பலருக்கும் தெரியும். இதனாலேயே சந்திவெளியில் பலர் இவருக்கு வாக்களிக்கவில்லை.

இதேவேளை இவர் பிள்ளையானின் கோட்டைகளில் ஒன்றான பிள்ளையானின் செயலாளர் பிரசாந்தனின் ஊரான ஆரையம்பதியில் திருமணம் செய்திருந்தார். ஆரையம்பதியில் கடும் அட்டகாசம் புரியும் பிள்ளையானின் பிரசாந்தன் குழு இவருடன் எதுவித பிரச்சனையும் செய்யவில்லை.

இதற்கு காரணம் இவருக்கு எப்பிரச்சனையும் செய்யக் கூடாது என இராணுவ புலனாய்வு பிரிவு பிரசாந்தனுக்கு தெரிவித்திருந்தது. மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றாள் மகிந்த அரசாங்கத்தின் மாகாண சபையில் இணைவதும், அதில் அமைச்சு பதவி எடுப்பதுமே இவரது நோக்கமாக இருந்தது. இராணுவ புலனாய்வு இவரை வெல்ல வைக்க முயற்சி செய்தும் தோல்வி கண்டனர்.

இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி மூலமாகவே இந்தத் தரகு வேலையைச் செய்தவர் இன்று உள்ள மட்டக்களப்பின் புத்திஜீவிகளையும் மக்களையும் ஏழனமாக நினைப்பதுடன் தான்னை நம்பியே மட்டக்களப்பில் கட்சி உள்ளது என மார்பு தட்டுபவர்

இளைஞர் அணி தலைவரானாலும் மட்டு இளைஞர்களை மதிப்பதில்லை அத்துடன் தலைமைப்பதவிக்காக பிரதேச வாதம் பேசி மற்றவரை மட்டம் தட்டி தலைமையைப் பிடித்தவர்.

தற்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பிரச்சாரம் செய்ய வேண்டாம் என இராணுவ புலானாய்வு கூறியதனால் இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒவ்வொரு பகுதியாக நடை பவணியாக சென்ற பகுதிகளுக்கு பிரச்சாரத்துக்கு செல்லவில்லை. ஆனால் தன்னை அடையாளம் காட்டக் கூடாது என்பதால் தொகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியை நாடி அங்கு சென்று அரசாங்கத்திற்கு எதிராக வீரப் பேச்சு பேசியுள்ளார்.

இவர் எதுவித தொழிலும் இல்லாமல் இருப்பதானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றிய தகவல்களை திரட்டுவதற்கு இராணுவ புலனாய்வு பிரிவு மாதாந்த நிதி உதவியை வழங்கி வந்தது. ஆனால் எந்தவித பிரச்சாரத்துக்கும் செல்லாத சேயோன் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதும் கிரான் மக்கள் தலைவர் சம்பந்தன் அவர்களின் வெனர் பாவித்து நடாத்திய பாற்சோறு வழங்கும் நிகழ்வில் தான் இவ்வெற்றிக்காக உழைத்தார் என்று காட்டும் வகையில் பெரும் நாடகம் நடித்துள்ளார்.

இவரது விடயமாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுபபினர்களே இவரை எல்லாவற்றுக்கும் கொண்டு திரிகின்றனர். மகிந்த வெற்றி பெற்றிருந்தால் சேயோன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் அணி என ஒன்றை தாபித்து அடையாளங் காட்ட ஆயத்தமாக இருந்துள்ளார். இதற்கு புலனாய்வு பிரிவு உடந்தையாக இருந்துள்ளது.

கட்சி நடாத்தும் எந்த நிகழ்வையும் ஒழுங்கு செய்யாது இதில் சென்று தான் பெரியாள் போன்று பேசிவிட்டு எனது பேச்சு எப்படி என தன்னை புகழ்ந்து கொண்டு திரிவதில் இவர் ஒரு சிறந்த நடிகன் ஆவார். அடிக்கடி பொதுமக்களிடம் சம்பந்தனுக்கு நல்ல பேச்சு பேசியுள்ளேன், மாவைக்கு நல்ல பேச்சு பேசியுள்ளேன் இப்படித்தான் செய்ய வேண்டுமென்று என கூறியதாக கூறுவார். இதற்கான ஆதார குரல் வடிவம் எம்மிடம் அடுத்த இவரின் வெளியீட்டில் அதுவும் இணைக்கப் படும் 

தான் என்ன சொன்னாலும் மாவையும் சம்பந்தனும் மறுக்க மாட்டார்கள். ஏனெனில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எனக்குத்தான் பெரும் செல்வாக்கு என்பதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றார் என கூறியுள்ளார். சிலரிடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை, மாகாண சபை உறுப்பினர்கள் நடவடிக்கை பற்றி அடிக்கடி தங்களிடம் மாவையும், சம்பந்தனும் ஆராய்வதாக புழுகியுள்ளான்.

எனவே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் இவரது விடயத்தில் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். இப்போதும் இவர் மறைமுகமாக கோட்டபாயவின் இராணுவ புலனாய்வு பிரிவின் கீழ் உள்ளார். தன்னை நல்லவனாக, உணர்வாளராக காட்டவே அடிக்கடி கட்சி நிகழ்வுகளின் தேசியத் தலைவரின் வழிகாட்டல் என்ற சொற்களை பாவித்து வருகின்றார். சேயோன் பற்றிய பல விடயங்கள் விரைவில் வெளிவரும்.

அதுமட்டுமின்றி நல்வவன் போல் இருந்து துரோகம் புரியும் அரசியல் வாதிகள், பிரிதிநிதிகள் சார்பான அனைத்து விடயங்களையும் ஒவ்வொன்றாக வெளியிட உள்ளேம்.

தமிழ் தேசிய உணர்வாளர் ஒன்றியம்,
மட்டக்களப்பு.
tamilnationalpeople@yahoo.com

– See more at: http://www.jvpnews.net/srilanka/94086.html#sthash.gTcuX3TD.dpuf

SHARE