மட்டக்களப்பு கைத்தறி நெசவு பெண் தொழிலாளர்கள் விசனம்

125

சர்வதேச பெண்கள் தினத்தில் தமது வாழ்வாதார தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கைத்தறி நெசவு பெண் தொழிலாளர்கள் விசனம்

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், நாட்டில் அண்மையில்  ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்தமையினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பெண் நெசவு தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு நகரின் பொதுச் சந்தையில் இயங்கி வரும் இந்த ஆதிதி கைத்தறி நெசவு நிலையத்தில் சுமார் 25 பெண்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பணியாற்றி வந்தனர். இங்கு 15 கைத்தறி, காணப்பட்டுள்ள போதிலும் தற்போது இங்கு மூன்று கைத்தறிகள் மட்டுமே இயங்குவதை காணக் கூடியதாக உள்ளது.

முன்பு ஒரு மாதத்திற்கு 100 சாரிகள் தாம் நெய்வதாகவும் தற்போது அது மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக 25 சாரிகள் வரை குறைவடைந்து ள்ளதாகவும் முன்பு தமக்கு ஒரு சாரி நெய்வதன் மூலம் 500 ரூபாய்க்கு மேற்பட்ட லாபம் கிடைத்த போதும் தற்போது அது  குறைவடைந்துள்ளதாகவும். தூர இடங்களுக்குச் சென்றே தமது மூலப் பொருட்களை பெற்று வருவதனால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் மின்சார கட்டணம் ஊழியர் களுக்கான சம்பளம். கட்டிடத்தின் வாடகை சந்தைப்படுத்தல்  என  பலதரப் பட்ட. பிரச்சனைகளை முகம் கொடுப்பதாகவும்  தற்போது விலை வாசிகள் உயர்வாக காணப்படுவதனால் தமது குடும்பத்தை நடத்து வதிலும் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக இந்தபெண் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

.முன்பு தாம் மூலப் பொருட்களை பெறும்போது அதற்குரிய பணத்தை அடுத்த தவணையில் கொடுத்து வந்ததாகவும் தற்போது முழுத் தொகையும் செலுத்த வேண்டியுள்ளதாகவும்  மின்வேட்டு காலங்களில் தாம் மனித வலுவை பயன்படுத்தி மிகுந்த சிரமத்துடன் தமது தொழிலை முன்கண்டு வந்ததாகவும், இங்கு தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும். வேட்டி சாரம், சாரிகள், துவாய்கள் என பலதரப்பட்ட ஆடைகள் நெய்யப்படுவதுடன் தற்கால கொட்டுன் சாரி மற்றும் ரியோ சார் என்பனவும் இங்கு உருவாக்கப்படுகின்றது.

இங்கு பணியாற்றுபவர்கள் பல வருட அனுபவங்களைக் கொண்டுள்ள போதிலும் தமக்கு உரிய வேதனம் கிடைக்கப்பெறவில்லை என மிகுந்த கவலையுடன் கருத்து தெரிவித்தனர். ஒரு நாளைக்கு ஒரு பெண் தொழிலாளி ஒரு சாரி நெய்வதன் மூலம் 800 ரூபாய் வரையான வருமானத்தை பெற முடியும் எனவும், தமது பொருட்களை விற்பனை செய்வதில் ஏற்றுமதி சம்பந்தமான பிரச்சினைகளை முகம் கொடுப்பதாகவும், இலங்கையில் சகோதர இனத்தைச் சார்ந்த மக்கள் இங்கு வந்து இந்த பொருட்களை விரும்பி வாங்கி செல்வதாகவும், சுற்றுலா துறையின் மூலம் தமக்கு சிறிதளவு வருமானம் கிடைப்பதாகவும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பின் பல நெசவு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், தமக்குரிய மூலப்பொருள் பிரச்சனை தீர்க்கப்படு மாகின் இதனை திறம்பட நடத்திச் செல்ல முடியும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பணியாளர்கள் குறைக்க ப்பட்டுள்ளதாகவும், எண்ணிக்கை குறைந்து செல்வதாகவும் தமது உடுதுணி, பொருட்களும் தற்போது விலை ஏற்றம் காரணமாக பண்டிகை காலத்தில் மட்டும் வியாபாரம் நடைபெறுவதாகவும், மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது உடுதுணிகளை விரும்பி கொள்வனவு செய்வதாகவும், இதில் பெண்களின் ஆடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த ஆதிதி கைத்தறி நெசவு நிலையத்தில், பெண்களுக்குரிய அதிக அளவிலான துணிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தமக்கு அரசாங்கத்தினாலோ அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களோ அல்லது மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவோ தமக்குரிய மூலப் பொருட்கள் உரிய நேரத்திற்கு நியாயமான விலையில் கிடைக்கும் போது தான் இந்தத் தொழிலை பழைய மாதிரி திறம்பட செய்து பல பெண்களுக்கு இதன் பயன்களைப் பெற முடியும் எனவும், கைத்தறி நெசவு, பெண் தொழிலாளர்களின் நெசவு பொருட்களுக்குரிய உற்பத்தி சந்தைப்படுத்தல் போன்ற விடயங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உதவும் போது தமக்கு அதிக பயன்களைப் பெற முடியும்.

வருமானம் குறைந்த பெண்கள் தலைமை தாங்கும் பெண்களே இதில் அதிகம் பணிபுரிந்து வருவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே சர்வதேச பெண்கள் தினத்தில் தமக்குரிய வாழ்வாதாரப் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து அதனை நிவர்த்தி செய்து தருமாறு இங்குள்ள கைத்தறி பெண்கள் நெசவாளர்கள் தமது வேண்டுகோளை முன்வைக்கின்றனர்.

இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் இவ்வாறான பெண்களின் வாழ்வாரத்தினை கட்டி எழுப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

 

SHARE