மட்டக்களப்பு நகரிலிருந்து பல மைல் தொலைவில் உள்ள கிழக்கு படையணிகளின் பாரிய முகாமான தரவையில் 2004 ஆண்டு என்ன நடந்தது ?

25

 

மட்டக்களப்பு நகரிலிருந்து பல மைல் தொலைவில் உள்ள கிழக்கு படையணிகளின் பாரிய முகாமான தரவையில் 2004 ஆண்டு என்ன நடந்தது ?
வல்லாதிக்க நாடுகளின் தலைமையில் இலங்கை தீவெங்கும் சமாதானம் பேணப்பட்டு கொண்டிருந்த காலம் அது அந்த காலகட்டத்தில் தான் கேணல் கருணாவின் தலைமையில் யாழ் வன்னி நிலங்களை விழுங்க வந்த சிங்கள படைகளை வெற்றிக்கொண்டு சுமார் ஐந்து வருட நீண்ட நெடிய சண்டைகளாக குறிப்பிடபடும் ஜெயசிக்குறு ஆனையிறவு போன்ற சமர்களில் வென்று கிழக்கு படையணிகள் தங்கள் பூர்விக மண் கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் 1997 ஆண்டு வன்னிகளம் நோக்கி கிழக்கிலிருந்து நகர்ந்த படையணிகள் 2001 ஆண்டு நடு பகுதியில் மீண்டும் தங்கள் பூர்விக நிலங்களில் தாயக விடுதலைக்காக ஆள் பேரப்பில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள் எப்படி என்றால் புலிகளின் தலைவர் கட்டளைக்கு இணங்க வீட்டுக்கு ஒரு பிள்ளை நாட்டை காக்க தரவேண்டும் என்பதே அங்கே தான் முதன் முதலில் கிழக்கில் பாரிய எதிர்ப்பு கிளம்பியது இனி எந்த காரணம் கொண்டும் எங்கள் பிள்ளைகள் யாழ் மண்ணில் மடிவதையோ இங்கிருந்து வடக்கு நோக்கி படைகளை நகர்த்துவதையோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டொம் என்று கிழக்கில் பாரிய எதிர்ப்பு அதையும் மீறி கிழக்கில் சுமார் 6000 போராளிகள் எந்த சவால்களையும் எதிர்கொள்ளும் வண்ணம் கேணல் கருணாவின் தலைமையில் கிழக்கில் நிலைகொண்டிருந்தார்கள் இங்கே குறிப்பிடத்தக்கது என்ன வென்றால் பல களங்களில் சிங்கள இராணுவத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய தளபதிகளான ராபேட் , தாத்தா , துரை போன்றோர்கள் கிழக்கில் தான் இருந்தார்கள் சிங்கள அரசுடனான பேச்சுவார்த்தை மேசைக்கு கேணல் கருணாவும் கலந்து கொண்டு பல தடவை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எப்படியாவது தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்று கொடுக்க வேண்டும் என்பதில் அன்ரன் பாலசிங்கம் மும்முரமாக இருந்தார் ஒரு தடவை ஜெர்மனிக்கு சென்ற புலிகளின் தளபதிகளை புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள் கேணல் கருணா தமிழ் செல்வன் போன்ற புலிகளின் முக்கிய தளபதிகள் கலந்து கொண்டார்கள் குறிப்பிட தக்க விடயம் என்னவென்றால் கேணல் கருணாவை புலம்பெயர் சமூகம் ஒரு கதாநாயகனை போலவே பார்த்தார்கள் தமிழ் செல்வனை ஒரு பொருட்டாக கூட எடுக்கவில்லை இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தை ஒருபுறம் இருக்க மறு புறம் கிழக்கில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்று கொண்டிருந்தன அது என்னவென்றால் புலிகளின் 32 நிர்வாக கட்டமைப்புக்களை கிழக்கில் நிலை நிறுத்தினார்கள் 32 நிர்வாக கட்டமைப்பில் மட்டக்களப்பு – அம்பாரை மாவட்டங்களை சேர்ந்த எவரையும் நியமிக்கவில்லை தொடர்ந்தும் நாம் ஏமாற்றப்பட்டு கொண்டிருப்பதை கிழக்கு போராளிகள் உற்பட கிழக்கு வாழ் தமிழ் மக்களும் உணர்ந்து கொண்ட முதலாவது சந்தர்ப்பம் என வரலாறு தன்பக்கத்தில் குறித்து கொண்டது
மறு புறம் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கேணல் கருணாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை பொறுத்து கொள்ள முடியாமல் பகல் கனவில் கண் விழித்த பொட்டம்மான் கருணாவை எப்படியாவது புலிகளின் தலைவர் மனதிலிருந்து அகற்ற வேண்டும் இதற்கு ஒரு சில தளபதிகளும் பொட்டம்மானுடன் கைகோர்த்து செயற்பட்டார்கள் கருணாவின் திடீர் எழுச்சியை பொறுத்து கொள்ள முடியாத யாழ் ஏகாதிபத்திய மனநிலை கொண்ட தளபதிகள் ஒரு கிழக்கான் எப்படி இரண்டாம் நிலை தளபதியாக வரலாம் என்று தலைவர் பிரபாகரனிடம் கருணாவை பற்றி ஒன்றுக்கு இரண்டாக கருணாவின் வளர்ச்சி கண்டு கொள்ள முடியாத பொறாமையின் உச்சத்தில் இருந்த தமிழ்செல்வன், பொட்டு , நடேசன் குழுவினரின் பிரதான வேலையே தலைவர் பிரபாகரன் காதில் கருணா அம்மானின் வளர்ச்சியை வேறு விதமாக போதிப்பது பிரபாகரனுக்கு கருணா மீது வெறுப்பு ஏற்ப்படும் விதமாக அதாவது புலிகள் அமைப்பின் அடுத்த தலைவர் கருணா ஆக கூடும் போராளிகள் மத்தியில் கருணாவுக்கு ஆதரவு அதிகம் என பிரபாகரனுக்கு காதில் ஓதி ஓதி கருணா அம்மான் மீது பிரபாகரனுக்கு வெறுப்பு ஏற்ப்பட வைத்ததுக்கு முழுக்காரணமே பொட்டம்மான் குழுவினர்தான்
1. தமிழ்ச் செல்வன் மட்டக்களப்புக்கு வந்து கருணாவின் திட்டங்களை அறிந்து தலைவரிடம் தவறாக முன்வைத்தது
2. பொட்டு அம்மான் மட்டக்களப்பு வந்து கருணாவைச் சந்தித்து தவறான தகவலை தலைவருக்கு முன்வைத்தது.
3. நடேசன் காவல் துறையினரை அனுப்பி இங்குள்ள தளபதி கருணாவின் தலையீடு இல்லாமல் நிருவாகத்தை நடத்தி மக்களின் மனங்களை நோகடித்தது
4. கல்வித்துறை கருணாவின் தலையீட்டினை விட்டுச் செயற்பட்மை
5. நிதித்துறை தேசிய புலனாய்வு திட்டத்துடன் செயற்பட்டமை
6. பிரதேசவாதம் இதுபற்றி தமிழீழ துறை பொறுப்பாளர்களுககு அறவே தெரியாது இவ்வாறு இருக்கும் போது இவர்களால் எவ்வாறு கிழக்கில் நிர்வாகம் செய்ய முடியும்
நார்வேயில் நடந்த பேச்சுவார்த்தையில் கேணல் கருணா ஓர் அமைதி ஒப்பந் தத்தை, பரிசீலிக்கிறோம்’ என, கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைக் கொண்டு வந்து 2003ம் ஆண்டு மார்ச் மாதம் பிரபாகரனிடம் கொடுத்தார் உடனே அதைத் தூக்கி வீசி எறிந்தார். போராட்டத்தை விற்றுவிட்டு வந்து நிற்கிறீர்கள்’ என்று, கத்தினார். “ஆச்சடா போச்சடா’ என்று சத்தம் போட்டார் நீங்கள் சொல்வது போல் இல்லை. போர்க்களத்தில் நான் தான் நிற்கிறேன். பல சண்டைகளை வெற்றி கொண்டுள்ளோம் போராளிகளும் மடிந்து போகின்றனர். ஆனால் மாற்றம் வந்துள்ளதா; வராது. போராளிகள் நம்பிக்கை இழந்து போகின்றனர். நாங்கள் எத்தனை சண்டைகளை வென்றாலும் ராணுவமும் படையெடுத்து வந்த வண்ணமே உள்ளது ஏனென்றால் அது ஒரு நாடு; நாட்டை எதிர்த்து போராடுகிறோம். உலகில் ஒரு நாடும் நம்மை அங்கீகரிக்கவில்லை. இந்தியாவின் ஆதரவும் இல்லை. அப்படியே ஆதரித்தாலும், பிரிவினை செய்து தனிநாடாக, இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது என தலைவர் பிரபாகரனிடம் கேணல் கருணா கூறினார் பொட்டம்மானின் சூழ்ச்சியால்
எதையும் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் தலைவர் பிரபாகரன் இருந்தார் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து தான் விலகுவதாக கூறி விட்டு கேணல். கருணா கிழக்கு வருகிறார்
கேணல் கருணாவை சந்தித்த
மட்டக்களப்பு – அம்பாரை மாவட்டங்களை சேர்ந்த போராளிகள் புத்திஜீவிகள்
சமாதான ஒப்பந்தம் வந்தபோது உருவாக்கப்படவிருந்த இடைக்கால நிர்வாகத்துக்காக தெரிவான 32 துறை செயலாளர்களில் ஒருவரை கூட கிழக்கு மாகாணத்திலிருந்து நியமிக்கும் அளவிற்கு அவர்களின் நெஞ்சில் ஈரம் இருக்கவில்லை. அதை கருணாவிடம் முறையிட்டனர், நாம் போராடும் பொழுதுகளில் எம்மை பாராட்டினார்கள், மட்டக்களப்பு – அம்பாரை வீரம்விளைநிலம் என்று சான்று தந்தார்கள். எமது கல்லறைகளில் தென்தமிழீழத்து மாவீரன் என்று கல்வெட்டு எழுதினார்கள்,
ஆனால் நாம் எமது உரிமைகளை கேட்ட மாத்திரத்தில் ஒரே நாளில் துரோகிகளாக்கப்பட்டோம். அப்படிஎன்றால் பிரிந்து செல்வோம் என்றார்கள் விளைவு கிழக்கு போராளிகளின் பிரிவு…….
தொடரும்……
SHARE