மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 54 இராணுவ முகாம்கள்!- த.தே.கூ. திடுக்கிடும் தகவல்

755
இலங்கை இராணுவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 புதிய இராணுவ முகாம்களை உருவாக்கி இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இந்த திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இந்த இராணுவ முகாம்களுக்காக மொத்தமாக 650 ஏக்கர் காணிப் பரப்பினை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஐந்து வருடங்களில் மொத்தமாக 145, 885 ஏக்கர் தனியாருக்கு சொந்தமான காணியை அரசாங்கம் ஆக்கிரமித்துள்ளது.

இதில் பெரும்பாலான காணிகள், இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக தமிழர்களுக்குச் சொந்தமாகவுள்ள 5030 ஏக்கர் காணிகளையும், பௌத்த விகாரைகளுக்காக 8576 ஏக்கர் காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மேலும் கரும்பு செய்கை பண்ணுவதற்கென 84 ஏக்கர் காணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்களையும் அம்பலப்படுத்தியிருந்தார்.

 

SHARE