2015-01-08 06:55:21சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த ஊரான மெதமுலனவில் வைத்து இன்று வாக்களித்ததன் பின்னர்,
அவர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக மாலைத்தீவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
பிற்பகல் 12.10 அளவில் இந்த விமானம் புறப்பட்டு சென்றதாக விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றி 700க்கும் அதிகமான காவற்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.