மனிதாபிமான நோக்கத்தில் மகிந்தவை சந்தித்தேன்! சதித்திட்டத்தில் பங்கேற்கவில்லை: பீரிஸ்

387

 

நல்லாட்சி பற்றி பேசும் சந்தர்ப்பத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்து கூறி தனக்கு தொந்தரவு கொடுக்கப்படுவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகி கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகையில் நடந்த சம்பவம் பற்றி புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதியின் வீ்ட்டுக்கு சென்றதாகவும் ஜனாதிபதியை சந்திக்கவே தான் அலரி மாளிகைக்கு சென்றதாகவும் வேறு எந்த சதித்திட்டத்திலும் தான் பங்கேற்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனவரி 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு தான் சென்ற நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி அதிகாரத்தை கைவிட தயாராகி வந்ததை காணக்கிடைத்தது என்றும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE