மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்

617
இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணைக் குழுவின் நான்கு விசா­ர­ணை­யா­ளர்கள் இலங்­கைக்கு விஜயம் செய்­யவும், 15 நாட்கள் இலங்­கையில் தங்­கி­யி­ருந்து நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கவும் எதிர்­பார்ப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு மேல­தி­க­மாக இரண்டு விசேட நிபு­ணர்கள் இலங்­கைக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்­கொண்டு விசா­ரணை செயற்­பாட்டில் பங்­கெ­டுக்­க­வுள்­ள­தா­கவும்
தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை அர­சாங்கம் அனு­மதி வழங்கும் பட்­சத்தில் இலங்கை வர­வுள்ள நான்கு விசா­ர­ணை­யா­ளர்­களும் 15 நாட்கள் இலங்­கையில் கள நட­வ­டிக்­க­கைளில் ஈடு­ப­ட­வுள்­ள­துடன், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் சாட்­சி­யா­ளர்­க­ளிடம் நேர்­கா­ணல்­க­ளையும் செய்­ய­வுள்­ளனர்.

அத்­துடன் சிவில் சமூக பிர­தி­நி­திகள், அர­சாங்க நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் ஆகி­யோ­ரையும் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தவும் எதிர்­பார்க்­கின்­றனர். மேலும் விசா­ரணைக் குழுவைச் சேர்ந்த பாது­காப்பு அதி­காரி ஒரு­வரும் இலங்கை வரு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளார்.

1173737_458043027627232_768320142_n

அந்­த­வ­கையில் மனித உரிமை விவ­காரம் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணைக் குழு­வா­னது விரைவில் விசா­ரணை செயற்­பாட்­டுக்­கான செயற்­பாட்டுத் திட்­டத்தை இலங்கை அர­சாங்­கத்­துக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

அதா­வது விசா­ரணைக் கட்­ட­மைப்பு விசா­ர­ணைகள் எவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­படும் ? எவ்­வா­றான முறை­மைகள் பின்­பற்­றப்­படும்? எந்­தெந்த நாடு­க­ளுக்கு விசா­ர­ணை­யா­ளர்கள் விஜயம் செய்­வார்கள்? சாட்­சிகள் எவ்­வாறு பெறப்­படும் உள்­ளிட்ட அனைத்து விப­ரங்­களும் அடங்­கிய செயற்­பாட்டுத் திட்­டமே விரைவில் அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு விசா­ர­ணை­யாளர் 10 மாத காலத்தில் இலங்­கையின் மனித உரிமை நிலை­மைகள் குறித்த கண்­கா­ணிப்­பையும் ஆவ­ணப்­ப­டுத்­த­லையும் முன்­னெ­டுக்­க­வுள்ளார்.

தக­வல்­களை ஆய்வு செய்தல் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் சாட்­சி­யா­ளர்­களை சந்­தித்து உரை­யா­டுதல் போன்­ற­வற்­றையும் இவர் 10 மாத காலத்தில் முன்­னெ­டுக்­க­வுள்ளார்.

விசா­ரணைக் குழுவில் இடம்­பெற்­றுள்ள சட்ட ஆலோ­சகர் 8 மாத காலத்தில் மனித உரிமை மற்றும் மனி­தா­பி­மான சட்ட்­ஙகள் குறித்த ஆலோ­ச­னை­களை வழங்­க­வுள்ளார்.

Vannei-civilian-injured-1-436x360imperialism

விசா­ரணைக் குழுவில் இடம்­பெற்­றுள்ள நிர்­வாக உத­வி­யாளர் ஒருவர் 10 மாத காலத்தில் பொது­வான விட­யங்­களை கவ­னிக்­க­வுள்­ள­தோடு நிர்­வாக மற்றும் ஏனைய வச­திகள் குறித்து பார்க்­க­வுள்ளார்.

தமிழ் மற்றும் சிங்­கள மொழி­களில் மொழி பெயர்ப்பு செய்­யக்­கூ­டிய வகையில் விசா­ரணைக் குழுவில் இடம்­பெற்­றுள்ளார்.

விசா­ரணைக் குழுவில் இடம்­பெற்­றுள்ள தடய அறி­வியல் நிபுணர் புகைப்­ப­டங்கள் மற்றும் வீடியோக் காட்சி போன்­ற­வற்றை ஆய்வு செய்­ய­வுள்ளார். பால்­நிலை நிபுணர் நியு­யோர்க்கில் இருந்­த­வாறு இரண்டு மாதங்கள் பணி­யாற்­ற­வுள்ளார்.

பாது­காப்பு அதி­காரி ஒருவர் விசா­ரணைக் குழுவில் இடம்­பெற்­றுள்­ள­துடன் இலங்கை அர­சாங்கம் அனு­ம­திக்கும் பட்­சத்தில் ஒரு மாத காலம் இலங்­கையில் தங்­கி­யி­ருப்பார்.

மேலும் இரண்டு விசேட நிபு­ணர்கள் ஜெனி­வாவில் 21 நாட்­களும் இலங்­கையில் 5 நாட்­களும் ஆசிய பசுபிக் பிராந்­திய நாடு­களில் 5 நாட்­களும் பணி­யாற்­ற­வுள்­ளனர்.

Aug262013_1

அத்­துடன் ஒரு விசேட நிபுணர் வட அமெ­ரிக்­கா­வுக்கு 5 நாட்­க­ளுக்கும் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு 5 நாட்­க­ளுக்கும் விஜயம் செய்­ய­வுள்ளார்.

இவர்கள் தகவல் சேக­ரித்தல் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் சாட்­சி­யா­ளர்­க­ளுடன் நேர்­கா­ணல்­களை செய்தல் ஆகி­ய­வற்றை முன்­னெ­டுக்­க­வுள்­ளனர்.

இதே­வேளை விசேட நிபு­ணர்கள் அல்­லாத விசா­ரணைக் குழுவில் இடம்­பெற்­றுள்ள இரண்டு விசா­ர­ணை­யா­ளர்கள் ஐரோப்­பா­வுக்கு 7 நாட்கள் விஜயம் ஒன்றை மேற்­கொண்டு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும் சாட்­சி­யா­ளர்­க­ளையும் சந்­திக்­க­வுள்­ளனர்.

அத்­துடன் நான்கு விசா­ர­ணை­யா­ளர்கள் ஆசிய பசுபிக் பிராந்­தி­யத்­துக்கு 10 நாட்கள் விஜ­யத்தை மேற்­கொண்டு சாட்­சி­யா­ளர்­களை சந்­திக்­க­வுள்­ள­துடன் ஏனைய தகவல் மூலங்கள் குறித்தும் ஆரா­ய­வுள்­ளனர்.

அந்­த­வ­கையில் விசா­ரணை செயற்­பா­டுகள் பிர­யா­ணங்­கள ஆவ­ணப்­ப­டுத்தல் உள்­ளிட்ட செல­வு­க­ளுக்­காக 14,60,900 டொலர்கள் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணை­யா­ளர்­களின் பிர­யாணச் செல­வுக்­காக 111,700 டொலர்­களும் விசேட நிபு­ணர்­களின் பிர­யாணச் செல­வுக்கு 84,000 டொலர்­களும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. ஆலோ­ச­கர்­க­ளுக்­கான செல­வாக 49,600 டொலர்கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் அர­சாங்­கத்­துக்கு ஐக்­கிய நாடு­களின் விசா­ரணை நட­வ­டிக்­கைகள் குறித்த செயற்­பாட்டுத் திட்­டத்தை கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில், அந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே இலங்­கைக்கு வரு­வ­தற்­கான அனு­ம­தி­யையும் விசா­ரணைக் குழு கோரலாம் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றெ­னினும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை செயற்­பாட்டின் எந்­த­வொரு நகர்­வையும் ஏற்­கப்­போ­வ­து­த­மில்லை என்றும் விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கப்­ப­டவும் மாட்­டாது என்றும் அர­சாங்கத் தரப்பில் தொடர்ச்­சி­யாக கூறப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

எனினும் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் 27வது கூட்டத் தொடரில் இலங்கை விசா­ரணை செயற்­பாடு குறித்த வாய்­மூல அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­மை­யினால் விசா­ரணைக் குழு சில வாரங்­களில் விசா­ரணை செயற்­பாட்டை ஆரம்­பித்­து­ விடும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

12 பேர் கொண்ட விசா­ரணைக் குழு ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்­ளை­யினால் நிய­மிக்­கப்­பட்­டது. விசா­ரணைக் குழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக மூன்று விசேட நிபு­ணர்­களும் நிய­மிக்­கப்­பட்­டனர்.

அந்த வகையில் பின்­லாந்து அரசின் முன்னாள் அதிபர் மார்ட்டி அதி­சாரி, நியூ­சி­லாந்தின் முன்னாள் ஆளுநர் சில்­வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்­ச­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர்கள் சங்­கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர் ஆகிய மூன்று விசேட நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

விசா­ரணைக் குழுவில் விசா­ர­ணை­யா­ளர்கள், தடய அறி­வியல் நிபு­ணர்கள், பால்­நிலை சிறப்பு நிபுணர் , சட்ட ஆய்­வா­ளர்கள் மற்றும் ஏனைய உத்­தி­யோ­கத்­தர்கள் ஆகியோர் உள்­ள­டங்­கு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விசா­ரணைக் குழு 10 மாதங்­களில் இலங்கை மனித உரிமை விவ­காரம் குறித்த விசா­ர­ணையை முன்­னெ­டுக்­க­வுள்­ளது. எதிர்­வரும் மார்ச் மாதம் ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 28 வது அமர்வில் குறித்த விசா­ரணை தொடர்­பான அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதற்கு முன்னர் செப்­டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள 27 ஆவது அமர்வில் வாய்­மூல அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

2014 ம் ஆண்டு ஜூன் 15 ம் திகதி முதல் 2015 ம் ஆண்டு ஏப்ரல் 15 ம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியே ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் இலங்கை விவ­காரம் குறித்த விசா­ரணை செயற்­பாட்டு காலப்­ப­கு­தி­யாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனினும் 2015 ம் ஆண்டு ஜன­வரி மாதம் 31ம் திக­தி­யா­கும் ­போது விசா­ரணைக் குழுவின் முழு­மை­யான அறிக்கை தயார் செய்­யப்­பட்­டு­ விடும் என்றும் கூறப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வாறு இருக்க மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணைக் குழு இலங்­கைக்கு எதி­ராக பல நாடு­க­ளு­ககும் சென்று விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் பட்­சத்தில் அவற்றை எதிர்­கொள்­வ­தற்கு அர­சாங்­கத்­திடம் உள்ள மாற்றுத் திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் அரச தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் பீரிஸ் ஜெனி­வா­வுக்­கான இலங்­கையின் வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க மற்றும் அமைச்­ச­ரவை பேச்­சாளர் கெஹ­லிய ரம்­புக்­வெல இது குறித்து அடிக்­கடி தெளி­வான அறி­விப்பை விடுத்­து­ வ­ரு­கின்­றனர்.

அது­மட்­டு­மன்றி இலங்­கையில் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேரவை எந்­த­வொரு விசா­ர­ணை­யையும் முன்­னெ­டுக்க அனு­ம­திக்­கக்­கூ­டாது என்று பாராளுமன்றத்தில் கடந்த மாதம் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 134 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டே இலங்கைக்கு எதிரான பிரேரணை கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

SHARE