மனைவியுடன் பாரிஸை கலக்கும் சுரேஷ் ரெய்னா

336
தேனிலவுக்காக மனைவி பிரியங்காவுடன் பாரிஸ் சென்றுள்ள சுரேஷ் ரெய்னா, அங்கு எடுத்த புகைப்படங்களை டிவிட்டர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா, தனது குழந்தை பருவ தோழியான பிரியங்கா சவுத்ரியை சமீபத்தில் மணந்து கொண்டார்.ஐபிஎல் போட்டிகளில் பிசியாக இருந்த ரெய்னா, தற்போது தனது மனைவியுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இவர் தனது மனைவியை அழைத்து கொண்டு பாரிசுக்கு தேனிலவு சென்று உள்ளார்.

சமீபத்தில் மனைவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை டிவிட்டரில் பதிவேற்றி ‘பாரிசில் காதல் அலை’ எனக் குறிப்பிட்டார். அவர் மேலும் சில புகைப்படங்களை டிவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

SHARE