மன்னாரில் பெருந்தொகை வெடி பொருட்கள் நேற்று திங்கள்கிழமை மன்னார் தலைமையக பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் சவுத்பார் கடற்கரையை அண்டிய பகுதியில் மன்னார் தலைமையக பொலிசார் நடத்திய திடீர் சோதனையின் போது பெருந் தொகை வெடி பொருட்கள் மீட்கபட்டுள்ளதுடன் அதனை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த டோற்றிகோவின் பணிப்புரைக்கு அமைவாக குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி ரத்ண மளல உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட பொலிஸ் குழு நேற்று திங்கள்கிழமை காலை குறித்த சவுத்பார் கடற்கரையை அண்டிய பகுதியை சுற்றி வளைத்து சோதனையிட்டபோது பெருந் தொகை வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்தாக படி ரக வாகனம் ஒன்றும் கைப்பற்றபட்டதுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யபட்டுள்ளனர்.
இதன்போது 190 டேற்ற நேற்றர் (டைனமோ) மற்றும் அதனை இணைப்பதற்கு பயன்படுத்தபடும் திரிகள் உட்பட 10 மீற்றர் வயர் என்பனவே கைப்பற்றபட்ட வெடி பொருட்களாகும்.
குறித்த வெடி பொருட்கள் சட்டவிரோத பின்பிடிக்காக பயன்படுத்படவிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களில் மூவர் குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றைய நபர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவராவார். இவர்களிடம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் நல்வரையும் இன்று மன்னார் நீதிமன்றில் முற்படுத்துவதுடன் வெடி பொருட்களையும் நீதி மன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.