மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரத்தில் பாலஸ்தான கும்பாபிசேகம்

319

 

மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரம் பாலஸ்தான கும்பாபிசேகம் கடந்த(07) ஞாயிற்றுகிழமை திருக்கேதீஸ்வர கோவிலின் மணி மண்டபத்தில் நடைபெற்றது.

unnamed (44)unnamed (43)
கோவில் புனரமைப்புக்கென 36 கோடி ரூபாய்கள் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு இதற்கான கட்டுமான பணிகள் ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடாக குறித்த பாலஸ்தான கும்பாபிசேகம்நடை பெற்றது.
இன்று ஞாயிற்றுகிழமை காலை ஏழு மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட பாலஸ்தான கும்பாபிசேகம் பூஜைகள் காலை 10:30 மணிவரை நடைபெற்றது.

unnamed (41) unnamed (42) unnamed (45) unnamed (46) unnamed (47)unnamed (48)
நயீனாதிவு நகபூசணி அம்மாள் கோவிலின் குருக்கள் பாமதேவ சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற பாலஸ்தான கும்பாபிசேகத்தில் திருக்கேதீஸ்வர குருக்கள் கண்ணன் சிவாச்சாரியார் உள்ளிட்ட ஏழு சிவாச்சாரியர்கள் பாலஸ்தான கும்பாபிசேகத்தை நடத்தினர்.

unnamed (49) unnamed (50) unnamed (51)
இவ் நிகழ்வில் யாழ்.இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

SHARE