மன்னார், சவுத்பார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்களட்கிழமை கரை ஒதுங்கியுள்ளது. சவுத்பார் கடற்படை முகாமிலிருந்து வங்காலை பகுதியை நோக்கிய சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் உருக்குலைந்த நிலையில் ஆடைகள் அற்ற நிலையில் காணப்படுகிறது. இதேவேளை பிரேத பரிசோதனை அதிகாரி ரி.பி.சிந்தாத்துரை, சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கும்படியும் அடையாளம் காண இரு வாரங்கள் வைத்தியசாலையில் வைக்கும்படியும் உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்