மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்திற்கு அபிவிருத்தி உதவித்திட்டங்கள் வைபவ ரீதியாக நேற்று கையளிக்கப்பட்டுள்ளன.
இதன்போது பாடசாலையில் ஆண் மாணவர்களுக்கான குளியலறைத் தொகுதி, தண்ணீர் தாங்கி தொகுதிகள் என்பவற்றுக்கான வேலைகள் நிறைவு பெற்ற நிலையில் அவை உத்தியோக பூர்வமாக கல்லூரி நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சம்பத் வங்கியின் வடக்கு, கிழக்கு பிரதம முகாமையாளர் சுமி மிதிரிபால, பிராந்திய முகாமையாளர் அரவிந்தன், மன்னார் முகாமையாளர் வதனதாசன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர் அருட்சகோதரன் விஜயதாசன், பங்குத்தந்தை, பாடசாலை அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.