மன்னார் மடுக்கரையில் இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி பலி

335

 

மன்னார் மடுக்கரை மல்வத்ஓயா ஆற்றில் இளைஞன் ஒருவன் மூழ்கி பலியாகிய சம்பவம் ஒன்று  வியாழக்கிழமை  நடைபெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் முகமட் நசீன் வயது (18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்
சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டடு பின் திடீர் மரண விசாரணை அதிகாரியின் மரண விசாரனைக்கு பின் உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவது
கடந்த 13ம் திகதி பனந்துறையை சேர்ந்த குடும்பம் ஒன்றும் அவர்களின் நண்பர்கள் சிலரும் கொழும்பு பாணந்துறையில் இருந்து மன்னார் சிலாவத்துறையில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர்.
சம்பவதினமாகிய நேற்று முன்தினம் அவர்களின் உறவினர்கள் எட்டு சிறுவர்கள் உள்ளடங்கலாக 21 பேர் மடுக்கரை பகுதியிலுள்ள மல்வத் ஓயா அற்றங்கரைக்கு அருகாமையில் பகல் வேளையில் சமைத்து உணவு உண்டு உல்லாசமாக இருந்துள்ளனர்.

mannar mannar 4

இதன்போது மாலை மூன்று இளைஞர்கள் வாகன டயர் ஒன்றின் டியூப் மூலம் ஆற்றில் நீந்தி விளையாடியுள்ளனர். இதன்போது இளைஞனின் கையிலிருந்த பந்து ஒன்று ஆற்றில் விழுந்துள்ளது.
இதனை அடுத்து இவ் இளைஞர்களில் ஒருவர் குறித்த டியூப்பில் இருந்து இறங்கி குறித்த் பந்தை எடுக்க முயற்சித்த வேளையிலே ஆளம் கூடிய பகுதியாகவும் இளைஞனுக்கு நீந்த தெரியமையாலும் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது அவரின் உறவினர்கள் அவரை காப்பாற்ற எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
இதனை அடுத்து விடயம் தொடர்பாக கிராம சேவகர் ஊடாக பொலிஸ் , கடற்படை ஆகியோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து இங்கு வந்த அவர்கள் கடந்த வியாழன் முதல் நேற்று வெள்ளிக்கிழமை வரை சுழியோடிகளுடன் இணைந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியளவில் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.

SHARE