மன்னார் மதவாச்சி பிரதான வீதியின் சமுத்ரா பாலம் அருகில் நடந்த வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
மதவாச்சியில் இருந்து பயணித்து கொண்டிருந்த பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்களில் பயணித்த மூவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 13 வயதான பாடசாலை மாணவன் ஒருவரும் அடங்கிறார். சமுத்ரா பாலம் பிரதேசத்தை சேர்ந்தவர்களே சம்பவத்தில் பலியாகினர்.
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.