மன்னார் மாவட்டத்தை அண்மித்த பகுதி யில் ரிசாடுக்கு எவ்வாறு 3000 ஏக்கர் காணி?…

340

 

மன்னார் மாவட்டத்தை அண்மித்த பகுதியில் 3000 ஏக்கர் காணி அமைச்சர் ரிசாட் பதியூதினின் குடும்பத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுபல சேனவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Rekptin

பொதுபல சேனவின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘ மன்னார் மாவட்டத்தை அண்மித்த பகுதியில் 3000 ஏக்கர் காணி அமைச்சர் ரிசாட் பதியூதினின் குடும்பத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான ஆவணம் தற்போது எம்மிடம் கிடைத்துள்ளது. இந்தளவு பெரிய நிலப்பரப்பு இவருக்கு எவ்வாறு கிடைத்தது? யார் இதனை இவருக்கு வழங்கினார்கள்?

இது குறித்து இலஞ்ச மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள போதும் இது வரையில் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. நீதியானது அனைவரையும் ஒரே மாதிரி தாக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் மோசடிக்காரர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள போதும் இவர் குறித்து மௌனமாக இருந்து வருகின்றது.

மேலும் நாட்டில் ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உடனடியாகப் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் சிறந்த அரசாங்கத்தை அமைத்துக் கொண்டு நாட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE