மயூரனின் தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி!

394

 

இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மயூரன் சுகுமாரனனின் தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகமான பீ.பீ.சி இதனைத் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த தமிழரான அவர், 2006ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் இருந்து அவரை காப்பாற்ற அவுஸ்திரேலிய மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அமைந்துள்ள தீவுக்கு, அவுஸ்திரேலியாவின் தூதரக அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் அவரது தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய தமிழன் மயூரன் சுகுமாரனுக்கு இன்று மரண தண்டனை

2005ம் ஆண்டு இந்தோனேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜையான மயூரன் சிவகுமாரன் என்ற தமிழரின் மனுக்கள் அணைத்தும் நிராகரிக்கப்பட்டு அவர் மரணதண்டணையை எதிர்கொள்வதற்கான அதிபாதுகாப்புச் சிறைக்கு இந்தோனேசிய நேரப்படி மார்ச் நான்காம் திகதி புதன்கிழமை மாற்றப்படவுள்ளார்.
நுசாகம்பங்கனொன் என்ற தீவிலியே இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும். அந்தத் தீவிற்கு புதன்கிழமை மாற்றப்படும் இவர்களிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 72 மணித்தியாலங்களிற்கு முதலே விவகாரம் தெரிவிக்கப்படும். இந்தத் தீவிற்கு புறப்படுவதற்கு தயாராகிவிட்ட மயூரன் சிவகுமாரன் தனது ஆடைகள் மற்றும் உபயோகித்த பொருட்களை ஏனைய சிறைக்கைதிகளிற்கு பகிர்ந்தளித்து “நன்றாக நடவுங்கள்”, “அவதானமாக இருங்கள்” என அறிவுரை கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியா அதீத அழுத்தத்தைப் பிரயோகிக்காதவிடத்து இந்த வார இறுதிக்குள் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றுப்பட்டுவிடும். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தங்களது அரசு தங்களினாலான அழுத்தத்தைக் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இவர்களின் விடுதலைக்கு ஆதரவாக கடந்த மாதம் மெழுகுவர்த்திப் போராட்டம் இடம்பெற்றது. அதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர். அதில் கலந்து கொண்ட மயூரனின் பேத்தியார் மயூரனை நீங்கள் விடுதலை செய்யாமல் விடுங்கள் நாங்கள் தாங்குவோம். ஆனால் கொல்லாதீர்கள். இந்தோனேசியா ஜனாதிபதியை மன்றாட்டமாகக் கேட்கிறேன், தயவு செய்து கொல்லாதீர்கள் எனத் தெரிவித்திருந்தார்.
தனது 24வது பிறந்த தினத்தன்று ஏப்ரல் 17ம், 2005ல் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இந்தோனேசியாவில் உள்ள பாலியில் வைத்து கைது செய்யப்பட்ட மயூரன் சிவகுமாரனிற்கு 2006ம் ஆண்டு மரணதண்டை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கெதிராக கொடுக்கப்பட்ட கருணைக் கோரிக்கை மனு இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நிராகரிக்கப்பட்டிருந்தது.
“பாலி-9” என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் ஒன்பது பேரடங்கிய குழுவில் ஒருவராக இருந்த மயூரன் சிவகுமாரன் சிறையில் இருந்த போது அங்கே பல மாறுதல்களைக் கொண்டு வந்திருந்தார். தான் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகமொன்றில் கலைப்பட்டதாரியாகச் சிறப்புத் தேர்வு பெற்றதோடு,
சிறைச்சாலையில் ஆங்கிலம், கணனி, கணனிவரைகலை, கணக்கியல் போன்ற பாடங்களை கற்பித்ததோடு தானிருந்த சிறைப்பகுதிக்கான தலைமை சிறைக்கைதியாக ஏனையவரை வழிநடத்தும் பொறுப்பையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார்.
அத்தோடு தங்களது சித்திரங்கள், வரைகலைகள் விற்பதற்கான வியாபாரநிறுவனமொன்றையும் ஆரம்பித்து அதனூடே தங்களது தயாரிப்புக்களை விற்பனை செய்து வந்தார். ஒரு சகோதரனையும், ஒரு சகோதரியையும் உடன்பிறப்பாகக் கொண்டிருந்த மயூரன் மற்றும் அவரது நண்பரான சீன இனத்தவர் இருவருமே தற்போது மரணதண்டனையை எதிர்காத்திருக்கின்றனர்.
மரணதண்டனையை உறுதிசெய்யப்பட்டதை அறிந்தவுடன் தனது வயிற்றில் யாரோ உரக்கக் குத்தியதைப் போன்ற வலியைத் தான் உணர்ந்ததாகவும், தன்னைப் பார்க்க வந்த அம்மா நிலத்தில் வீழ்ந்து அழுதபடியே இருந்ததாகவும், தனது தங்கை தேம்பியழுதபடி வார்த்தையில்லாமல் வாயடைத்து நின்றதாகவும் தனது தம்பியோ அதிர்ச்சியடைந்து என்னசெய்வதென்று தெரியாமல் நின்றதாகவும் தெரிவித்த மயூரன்,
புனர்வாழ்வு என்பதன் அர்த்தம் என்ன? எங்களுடைய குடும்பங்கள் இத்தனை துண்பத்தைப் பெறக்கூடாது. நாங்கள் இந்த மரணதண்டணைக்குரியவர்கள் அல்ல எனத் தெரிவித்திருந்தார்.
மயூரன் வரைந்த படங்கள் சிறந்த பரிசைப் பெறுவதற்கான போட்டியொன்றிற்கு அனுப்பப்பட்டதும், மயூரனின் திறமையைக் கண்ணுற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சிறந்த ஓவியர் சிறைச்சாலை சென்று மயூரனிற்கு பயிற்றுவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மயூரன் இல்லாத சிறையை தங்களால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது என அவருடன் சிறையிலிருக்கும் ஏனைய மரணதண்டனைக் கைதிகள் தெரிவித்தனர். மயூரணின் கருணைமனுவை நிராகரித்த இந்தோனேசிய ஜனாதிபதி தற்போது போதைப்பொருள் கடத்தலிற்காக கடந்த காலங்களில் மரணதண்டணை விதிக்கப்பட்டுள்ள 64 பேருக்கும் மரணதண்டனையை நிறைவேற்றும் படி குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசிய நடைமுறைப்படி மரணதண்டனை கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவார்கள். 12 பேர் கொண்ட குழு ஒவ்வொரு கைதிக்கும் நியமிக்கப்படும். மூன்று காவலர்களின் துப்பாக்கிகளில் உண்மையான சன்னங்களும் ஒன்பது காவலாளிகளின் துப்பாக்கிகளில் சத்தம் மாத்திரம் வருகின்ற சன்னங்களும் இருக்கும். அனைவரும் ஒரே நேரத்தில் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொள்வார்கள். உண்மையான சண்ணங்கள் எந்தத் துப்பாக்கியில் இருந்து சென்றன என்பது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்பவர்களிற்கு தெரியாது. இது ஒரு கொடுரமான மரணதண்டனை முறையாகக் கருதப்படுகின்றது.
ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டதும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும்
SHARE