மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான் ஆகியோரின் சட்டத்தரணியொருவர் இந்தோனேஷிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

365

 

மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான் ஆகியோரின் சட்டத்தரணியொருவர் இந்தோனேஷிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Sukumaranஇவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றி ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ பரிசீலிக்க மறுத்தமைக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் வாய்ப்பை நிர்வாக நீதிமன்றம் நிராகரித்தமைக்கு எதிராக சட்டத்தரணி மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த விவகாரத்தில் தனக்கு நியாயாதிக்கம் இல்லையெனவும், பொதுமன்னிப்பு வழங்கும் ஜனாதிபதியின் அதிகாரத்திறகு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் நிர்வாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதென ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் வாதிட்டார்கள்.

இதனை நிராகரிக்கும் மயூரன் மற்றும் சானின் சடடத்தரணிகள், தாம் குறித்த நடைமுறைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்கள்.

இந்த மனுவின் மீதான விசாரணை அடுத்த வாரம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு அமர்வுகளின பின்னர் ஏப்ரல் மாத முற்பகுதியில் தீர்ப்பு அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.INDONESIA AUSTRALIA BALI NINE DRUGS APPEALMayooran

3,68

SHARE