மயூரன் சுகுமாருக்கு இன்னும் சில மணி நேரங்களில் மரண தண்டனை?-போதையின் பாதையில் மரணத்தை எதிர்பார்த்து மனம் பதைத்து காத்திருக்கும் இரு உயிர்களின் இறுதி மணித்துளிகள்..

384

 

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் ( ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டவர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு இன்று மதியம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மயூரன் சுகுமார் மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு இது பற்றி கடந்த சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனை அறிவிக்கப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்.

அந்த வகையில் இன்று மதியம் 2 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசிய அதிபர் இவர்களுக்கு இறுதி நேரத்தில்  கருணை காட்டாத பட்சத்தில் இவர்களுக்கான தீர்ப்பு நிறைவேற்றப்படும் என கூறப்படுகின்றது.

இவர்களுக்கு தீர்ப்பளிப்பதற்கு முன்னர் இவர்களை குடும்பத்தினர் சென்று பார்வையிட்டுள்ளனர். மயூரனின் சகோதரி அவரைப் பார்த்த போது மயங்கி விழுந்துள்ளார். அன்ரூ சானின் தாயார் கண்ணீர் மல்க நின்றிருந்தார்.

இதேவேளை அன்ரூ சான் மரண தண்டனைக்கு முன் தனது காதலியை சிறைச்சாலையில் வைத்து திருமணம் செய்துள்ளார்.

உலகம் முழுவது இவர்களது மரண தண்டனை ஒத்திவைக்கப்படாதா என ஆவலோடு காத்திருக்கும் தருணத்தில் இறுதி நேரத்தில் ஏதும் அற்புதங்கள் நிகழாதா என இவர்களது குடும்பத்தினர் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

 

சிறையில் கலையும் கனவும்… ரவையில் எழுதிய முடிவும் .. மயூரனின் இறுதி தருணங்கள்..

போதையின் பாதையில் மரணத்தை எதிர்பார்த்து மனம் பதைத்து காத்திருக்கும் இரு உயிர்களின் இறுதி மணித்துளிகள்..

மயூரன் சுகுமாரன் – அன்ட்ரூ சான் இன்று மரணத்தை எதிர்கொள்ளவுள்ளார்கள்.

மயூரன்..
எம்மவன் ..

தன் வாழ்வின் முற்றுப்புள்ளி இன்று எனத் தெரிந்தும் சலனம் இல்லை இவன் கண்களில் தூரிகையினால் துளையிடும் இதயத்தினை வரைந்து நாழிகைகளை நகர்த்தி அமைதி தேடும் இவன் கரங்கள்.. அந்தக் கரங்கள் அவன் விழிநீரை துடைத்து துடைத்து தோல்வி கண்டதாலோ என்னவோ இன்று ஓவியம் தீட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துகிறது ..
எமனின் பாசக்கயிறு இவன் முடிவில் ஏமாற்றிவிடாதா என்பது எம்மவரின் இறுதிநேர எதிர்பார்ப்பு.

மயூரன் சுகுமாரன் அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கை தேசத்தை சேர்ந்தவன் . போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக இந்தோனேசிய பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனையும் விதிக்கப்பட்டாயிற்று இன்று இரவு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக மயூரனின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இறுதிவிடை கொடுக்கும் சந்தர்ப்பத்தினை அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களிற்கும் இந்தோனேசிய அரசு வழங்கியுள்ளது.

அதன் பின்னர் அவர்கள் வேறாக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. பின்னர் சிறைக்கு வெளியே காத்திருக்கும் அவர்களது குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.

சடலங்களைத் தாங்க சவப்பேழைகள் தயார் நிலையில்..

ஆனால் மனிதாபிமான ரீதியாக இவர்களை விடுவிக்குமாறு எழுந்த கோரிக்கைகள் மறுக்கப்பட்டது போலவே, அன்ட்ரூ சானும் மயூரனும் தங்களுக்கு பிடித்த மதகுருமாரைத் தெரிவு செய்யும் உரிமையையும் இந்தோனேசிய சிறைச்சாலை நிர்வாகம் மறுத்துள்ளது.

இவன் செய்திட்ட குற்றம் மிகக்கொடிது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்திற்கும் இடம் இல்லை இருப்பினும் இளவயதில்

இன்மை நன்மை புரியாது புரிந்திட்ட இவன் தவறுக்காய் இதயத்தில் துப்பாக்கியின் தோட்டாக்கள் போடும் துளை சகலரும் செய்யும் தவறுகளை நிறுத்திவிடுமா???

இவன் முடிவு இச் சமூகத்தில் புரையோடி போயிருக்கும் அத்துணை தவறுகளுக்கும் தீர்வாகிவிடுமா ???

இத்தகைய வினாக்களோடு உலகமே காத்திருக்கிறது, இறுதி நேர அற்புதங்கள் ஏதாவது நிகழ்ந்திடாதா என.

அன்ரு சான் அவரது இறுதி மணித்தியாலங்களை அவரது குடும்பத்தினருடன் தேவாலயத்தில் கழிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

மயூரன் சுகுமாரன் தனது இறுதி மணித்தியாலங்களை ஓவியம் தீட்டுவதில் செலவிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

மயூரன் தனக்கு பாய்ச்சப்படும் குண்டுகளை செலுத்தும் ஆயுததாரியை நேரடியாக பார்த்துக்கொண்டே மரணத்தை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

மரணம் சிலருக்கு அதிகமான வீரத்தை ஊட்டிவிடுகிறது.

அவர்களுக்கு இந்தோனேசிய அரசின் சிறைச்சாலை விதிகளின் படி, இதயத்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அந்த சூட்டில் உயிர் பிரியாவிட்டால் தலையில் சுட்டு தண்டனை நிறைவேற்றப்படும்.

இறுதி மணித்தியாலங்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும் ?

அவர்களது குடும்பத்தினர்களின் மனநிலை எப்படியிருக்கும் ?

– See more at: http://www.tamilwin.com/show-RUmtyERcSUjxzF.html#sthash.355FByAr.dpuf

SHARE