மரணத்தின் விளிம்பில் ஹக்கீமின் ஹெலிகொப்டர் பயணம்.

123

ஒரு தேசிய கட்சியின் தலைவன் என்ற அடிப்படையிலும் தான் அதிகமாகக் களத்தில் குதித்தால்தான் இந்தக் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலும் தேர்தல் காலத்தில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அபாரமானவை-ஆபத்தானவை..

தேர்தல் காலத்தில் அவருடன் இருந்து கட்சியின் ஊடகத்தை நெறிப்படுத்தி அதை முன்னெடுத்துச் சென்றவன் என்ற வகையில்,பல உண்மைகளை நான் அறிவேன்.

கட்சியைக் காப்பாற்றுவதற்காக அவர் எவ்வாறெல்லாம் பாடுபட்டார்;எவ்வாறான உயிர் ஆபத்துகளை எதிர்கொண்டார் என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் எதிர்கொண்ட ஓர் ஆபத்தான சம்பவத்தை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

பல இடங்களில் கட்சி வீழ்ச்சியடைந்து காணப்பட்டதால் அந்த இடங்களுக்கு அதிகம் செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு.தேர்தலுக்கான காலமும் குறுகியே காணப்பட்டதால் அனைத்து இடங்களுக்கும் விரைவாகச் சென்று வருவதற்கு அவர் பயன்படுத்தியது சிறிய ரக ஹெலிகொப்டரையே.

அந்தப் பயணங்கள் அவருக்கு சௌகரீகமாக இருக்கவில்லை என்பது அந்தப் பயணத்தின்போது அவருடன் இருந்தவர்களுக்கு மாத்திரம்தான் தெரியும்.

புத்தளத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹக்கீம் நண்பகல் 12 மணிக்கு கொழும்பில் இருந்து புத்தளத்திற்கு ஹெலிகொப்டர்மூலம் புறப்பட்டுச் சென்றார்.

அதேநேரம், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரசிங்கவும் வேறு ஹெலியில் சென்றார்.இதனால்,ஹக்கீம் சென்ற ஹெலியின் சமிஞ்சையில் கோளாறு ஏற்படத் தொடங்கியது.

அந்த விமானத்தின் சமிஞ்சை கட்டுநாயக்க சார்வதேச விமான நிலையத்தில் உள்ள ராடாரில் படவில்லை.இதனால்,ஹெலி திசை மாறத் தொடங்கியது.

2000 அடி உயரத்தில் பறக்க வேண்டிய ஹெலி 5000 அடி வரை மேலே எழுந்தது;தடுமாறத் தொடங்கியது.கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியது.ஹெலியின் கெப்டன் அதைக் கீழே இறக்குவதற்காகப் போராடினார்.

அப்போது அந்த ஹெலி மரணத்தின் விளிம்பைத் தொட்டுக் கொண்டிருந்தது.உள்ளே இருந்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று உங்களுக்குச் சொல்லத் தேவை இல்லை.

பலத்த போராட்டத்தின் பிறகு ஒருவாறு ஹெலி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உரிய இடத்தில் இறக்கப்பட்டது.

இதைப்போல்,மற்றுமொரு சம்பவமும் இதைத் தொடர்ந்து இடம்பெற்றது.

கண்டி ரங்கலையில் பிரசாரக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் கலந்துகொள்வதற்காக அதே ஹெலியில் சென்றார் ஹக்கீம்.

ரங்கலை இந்துக் கல்லூரி மைதானத்தில் அது இறங்குவதாக இருந்தது.மலைகள் நிறைந்த இடமாக இருந்ததால் அந்த மைதானத்தைக் கண்டு பிடிப்பது ஹெலியின் கெப்டனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

அந்த மைதானத்தைத் தேடி சுமார் 40 நிமிடங்கள் ஹெலி வானில் வட்டமிட்டது.இறுதியில் முடியாமலே போனது.பிறகு,கண்டி தெல்தெனிய மைதானத்தில் தரை இறக்கப்பட்டது.

இவ்வாறு மிகவும் ஆபத்தான பயணங்களாக ஹக்கீமின் ஹெலிகொப்டர் பயணங்கள் அமைந்திருந்தன.

கட்சியைக் காப்பற்றுவதற்காக அவர் எவ்வாறு உயிரைக் கொடுத்துப் போராடினார் என்பதை இதன்மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகும் அவர் துணிச்சலுடன் ஹெலிகொப்டர் பயணங்களைத் தொடர்ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.slmc 01slmc 02slmc

SHARE