சென்னை: மருத்துவ கல்லூரி திகில் கதையாக உருவாகிறது ‘நீதான் ராஜா’. இது பற்றி இயக்குனரும், ஹீரோவுமான நிரஞ்சன் கூறியது:தங்கை மீது உயிரை வைத்திருக்கும் அண்ணன் அவளை டாக்டராக்கி பார்க்க ஆசைப்படுகிறான். மருத்துவ கல்லூரியில் தங்கையை சேர்த்து அழகுபார்க்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் கல்லூரியில் நடக்கும் அதிர்ச்சியான சம்பவத்தால் தங்கை பாதிக்கப்படுகிறாள். இதையறிந்து கோபம் அடைந்த அண்ணன் தங்கையை மீட்க எப்படி போராடுகிறான் என்பதை திடுக்கிடும் சம்பவங்களுடன் கதை கூறுகிறது.‘சூறையாடல், ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே படங்களில் நடித்த காயத்ரி ஹீரோயின். ‘மாங்கா படத்தில் ஹீரோயினாக நடிக்கும் லீமா தங்கையாக நடிக்கிறார். பாலாசிங், சம்பத்ராம், வெள்ளைய தேவன், குண்டு ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவா இசை. தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சரவணகுமார் தயாரிக்கிறார்.தென்காசி, குற்றாலம், பாபநாசம், திருநெல்வேலி, சாலைபுதூர் ஆகிய இடங்களில் படமாகி உள்ளது