மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் குடும்பத்தினரை சந்தித்துள்ள நடிகர் சூர்யா- எதற்காக தெரியுமா?

13

 

நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு நடிக்க தொடங்கினாலும் ஆரம்பத்தில் படாத கஷ்டம் இல்லை.

தொடர்ந்து படங்கள் நடித்து வந்தாலும் சரியான ரீச், இப்படியே போனால் என்ன ஆவது என 6 பேக்ஸ் வைத்து நடிக்க தொடங்கினார்.

மிகவும் தரமான நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து இப்போது சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது எல்லாம் வாங்கி ரசிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தேசிய விருது வாங்கிவிட்டார் என ஈஸியாக கூறினாலும் அதனை பெற அவர் எவ்வளவு உழைத்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார், படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இயக்குனர் குடும்பம்
சூர்யா திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது அயன். கே.வி.ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் சூர்யா, தமன்னா நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

2009ம் ஆண்டு வெளியான இப்படம் ரூ. 80 கோடி வரை வசூலித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு கே.வி.ஆனந்த் அவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.

தற்போது கே.வி.ஆனந்த் மகளுக்கு திருமணம் கூடியுள்ள நிலையில் சூர்யா மற்றும் சிவகுமார் அவர்கள் இயக்குனரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளனர். அப்போது எடுக்க்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

SHARE