மலேசியாவில் கைதான விடுதலைப்புலி சந்தேகநபர்கள் மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!-

538
மலேசியாவில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் மூவரும் நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இலங்கையின் ஊடகங்களுக்கு சிறிய அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் இலங்கைக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் மலேசியாசில் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட எட்மன் சிங்கராஜா என்ற சீலன் சசி, இந்திக சஞ்சீவ என்ற மொஹமட் சஞ்சய் அப்துல், அப்துல் சலீம் பின் மொஹமட் ஆகிய மூவரும் நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தற்போது அவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

SHARE