மலேசிய நில நடுக்கம்: பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

338
நேற்று முன்தினம் மலேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 பேராக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேரை காணவில்லை என தெரியவந்துள்ளது.

மலேசியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தில் அந்த நாட்டின் மிக உயரமான கிணபாலு சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 6 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும் மலைப்பகுதியில் சிக்கியிருந்த 137 பேரை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் இரண்டு பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள்

SHARE