மலையாள நடிகையை தேடும் களவாணி சற்குணம்!

523

விமல் நடித்த களவாணி, வாகைசூடவா மற்றும் தனுஷ் நடித்த நய்யாண்டி ஆகிய படங்களை இயக்கியவர் சற்குணம். முதல் இரண்டு படங்களை வித்தியாசமான கதையில் இயக்கிய அவர், நய்யாண்டி படத்தை ஒரு மலையாள படத்தின் கதையை காப்பியடித்திருந்தார். ஆனபோதும் மலையாளத்தில் ஹிட்டடித்த அப்படம் தமிழில் தோல்வியடைந்து விட்டது.
அதோடு, அப்படத்தை ஓடவைக்கும் முயற்சியாக, தனுஷ்-நஸ்ரியா இடம்பெற்ற ஒரு பாடலில் நஸ்ரியாவை தொப்புள் காட்டி நடிக்க சொன்னார் சற்குணம். ஆனால் அவர் மறுத்து விட்டார். அதையடுத்து அவருக்குப்பதிலாக இன்னொரு நடிகையை டூப்பாக வைத்து அந்த காட்சியை படமாக்கினார். அதையடுத்து, படம் திரைக்கு வரும் நேரத்தில் இந்த விசயம் நஸ்ரியாவின் காதுக்கு வர, போர்க்கொடி பிடித்தார். அதனால் அந்த தொப்புள் பாடல் காட்சியையே கத்தரித்தார் சற்குணம்.
பின்னர், உடனடியாக படம் இயக்காமல் இருந்த அவர், இப்போது அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அந்த படத்தை மிஷ்கின் இயக்கும் பிசாசு படத்தை தயாரிக்கும் அதே டைரக்டர் பாலாவே தயாரிக்கிறாராம். தனது களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி ஆகிய மூன்று படங்களிலுமே மலையாள நடிகைகளை நடிக்க வைத்த சற்குணம், இந்த படத்திற்கும் கேரளாவைச்சேர்ந்த குடும்பப் பாங்கான புதுமுக நடிகையை தேடி வருகிறார்.
SHARE