மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: ஒருவர் பலி

476

100 பேர் கதி என்ன? மீட்புப்பணி தீவிரம்

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வந்த ‘ட்ரஸ்ட் ஹைட்ஸ்’ என்ற அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து தரைமட்டம் ஆனது.100-க்கும் மேற்பட்டோர் இடுபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்கள் அனைவரும் வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் ஆவர். சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னை விரைந்துள்ளது. இடுபாடுகளில் சிக்கிய  8 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.​விபத்து காரணமாக குன்றத்தூர்- போரூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனம் விளக்கம் 

கட்டுமான பணியின் போது திடீரென இடி விழுந்ததால் கட்டிடம் இரண்டாக பிளந்து விபத்து ஏற்பட்டதாக பிரைம் சிருஷ்டி கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகி பாலகுரு விளக்கமளித்துள்ளார்.

மற்றொரு கட்டிடத்துக்கும் ஆபத்து

இடிந்த கட்டிடம் அருகே உள்ள மற்றொரு கட்டிடமும் நிலையற்ற தன்மையில் உள்ளது. இதனால் இந்த கட்டிடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை ஜெ.

கட்டிட விபத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.  இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மெட்ரோ ரயில் பணியாளர்களும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் ஈடுபட ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கட்டுமான தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ள செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் நேரில் ஆய்வு 

மவுலிவாக்கத்தில் 13 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்ட இடத்தை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் நேரில் சென்று  ஆய்வு செய்தார். ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனும் நேரில் பார்வையிட்டார்.

கட்டிட விபத்தில் ஒருவர் பலி

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் சிக்கிய முத்துபாண்டி என்ற தொழிலாளி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இரவிலும் மீட்பு பணிகள்

கட்டிட விபத்தில் சிக்கியவர்களை மிட்க இரவிலும் மீட்புபணிகள் மேற்கொள்ள மேற்கொள்ள ஏதுவாக போதிய மின்விளக்கு வசதிகள் ஏற்பாடுகள் செய்யபடுகின்றன. மீட்பு பணியில் 24 தீயணைப்பு அவசர சிகிச்சை வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

SHARE