முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்டி தலதா மாளிகைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் மஹிந்த கண்டிக்கு சென்ற போது, எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அங்கு தலதா மாளிகைக்கு அருகில் பலர் மஹிந்தவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.
திடீரென சீன நாட்டவர் ஒருவர் மஹிந்தவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரினதும் அவதானத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல சீன நாட்டவர்கள் மஹிந்தவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.