மஹிந்தவின் செயற்பாடு இளம் அரசியல்வாதிகளுக்கு பிழையான உதாரணம்: ஹிருனிக்கா

181

நுகேகொடையில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமை காரணமாகவே ஏனைய இடங்களிலும் அவர்கள் மஹிந்தசவுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்தியதாக மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர குற்றம் சுமத்தியுள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

மஹிந்த ராஜபக்சவின் செயற்பாடு, இளம் அரசியல்வாதிகளுக்கும் பிழையான நோக்கத்தை தோற்றுவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தோல்வியடைந்த ஒருவர் வெற்றிப்பெற்ற ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீது அன்புக் கொண்டிருந்தால் விஹாரைகளுக்கு சென்று கட்சிக்கு எதிராக மேற்கொள்ளும் பிரசாரங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஹிருனிக்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE