முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாது ஒருவர் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.
களனி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீன்பிடித் திணைக்களத்தின் இணை நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நபர் ஒருவரே இவ்வாறு நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் தோல்வியடைவதனை தொலைக்காட்சி தேர்தல் முடிவுகளின் மூலம் அறிந்து கொண்ட நபர் திடீரென நோய்வாய்ப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
63 வயதான நிமலசிறி அபேவிக்ரம என்பவரே இவ்வாறு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.