மஹிந்தவுக்கு எதிராக 7000 முறைபாடுகள்: திணறும் நிதி மோசடி விசாரணை பிரிவினர்

133
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இதுவரை, பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஏனைய விசாரணை பிரிவுகளுக்கு சுமார் 7000 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்ற பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் 600 அதிகாரிகள் மாத்திரம் இருப்பதனால் குறித்த முறைபாடுகள் தொடர்பில் விரைவான விசாரணைகள் மேற்கொள்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அரசாங்கத்தின் போது பாரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் வேறு சம்பவங்கள் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட்ட அதிகாரிகளினாலேயே குறித்த முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதுவரை மெதுவாக இடம்பெற்று வருகின்ற குறித்த விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

SHARE