மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கப் போவதில்லை – மைத்திரி

127
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு வேட்பாளர் நிலை வழங்கப்பட தாம் இணக்கம் வெளியிட்டதாக வெளியான தகவலை ஜனாதிபதி மறுத்துள்ளார்.

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் மூலம் அவரால் நாடாளுமன்றத்துக்கு தெரிவாக முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை தமது பொதுத்தேர்தல் திட்டம் தொடர்பாக மஹிந்த ராஜபக்ச நாளை புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி அறிவிக்கவுள்ளார்.

SHARE