மஹிந்தவை பிரதமராக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா றோ உளவுப் பிரிவு குறித்து இதுவரையில் பல ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

313

மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதாற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொக்கும் இந்தியாவின் றோ உளவுப் பிரிவு குறித்து இதுவரையில் பல ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

indiaa

எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு அழுத்தம் கொடுத்திருப்பது வேறு எந்த தரப்பும் அல்ல இந்தியா என இதற்கு முன்னர் செய்தி வெளியாகியது.

அதற்கமைய மஹிந்தவுக்கு மீண்டும் அதிகாரம் வழங்குவது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பிரதான காரணமாக இருப்பதோடு மஹிந்த ராஜபக்ச மற்றும் சீனாவுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்களும் இதற்கு முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரதான நாடாக காணப்படுகின்ற நிலையில் இதுவரையில் சீனா இலங்கையின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பல வகையில் உதவிகளை செய்துள்ளது.

எனினும் மஹிந்த ராஜபக்சவின் அதிகாரம் இழக்கப்பட்டதை தொடர்ந்து சீனா குறித்த கொடுக்கல் வாங்கல்களை கைவிட்டுள்ள நிலையில் அதற்கு பதிலாக அவர்கள் பாகிஸ்தானை தெரிவு செய்தது.

பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்தை முன்னிலைப்படுத்தி அவர்களது கடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் இந்த உறவு நேரடியாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவு இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பில் அவ்வளவு இலகுவான நிலைமை காணப்படாமையினால் பொருளதாரத்திற்கு அச்சுறுத்தல் எற்படுவது உறுதியாகும்.

எனினும் இலங்கையுடனான சீனாவின் கொடுக்கல் வாங்களினால் இந்தியாவுக்கு பொருளாதார அழுத்தம் கொடுக்கப்படாத நிலையில் இலங்கைக்கு வரும் பல சீன கப்பல்கள் இந்தியா துறைமுகங்களின் சேவையை பெற்றுக்கொள்கின்ற நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பில் அழுத்தம் கொடுக்க முடியவில்லை என இந்தியா இரகசிய புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

எப்படியிருப்பினும் சீனா பாகிஸ்தானை தூரப்படுத்துவதற்காக சீனா – இலங்கை உறுவு மீண்டும் வலுவடைய செய்ய வேண்டியுள்ளதோடு அதற்காக மீண்டும் மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டுவரவுள்ளதாக றோ உளவுப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE