மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகின்றது

138
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றியீட்டக் கூடாது என்பதற்காக தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவியன் போர்க் குற்றவியல் விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக தேர்தல் நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்தார்.

போர்க் குற்ற விசாரணை அறிக்கையில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தால் அந்த அறிக்கையை சாதமாகக் கொண்டே மஹிந்த ஆட்சியை கைப்பற்றுவார். இது குறித்து மேற்குலக நாடுகள் ஜனாதிபதியை அறிவுறுத்தியிருந்தன.

செப்டம்பர் மாதம் விசாரணை அறிக்கை வெளியிடப்பட உள்ளது. சில வேளைகளில் இந்த அறிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் ஊடகங்களுக்கு கசியக் கூடும். எனவே விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலை நடாத்தத் தீர்மானித்தார்.

மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படக் கூடிய குழப்ப நிலைமைகளை கருத்திற் கொண்டும் என ஜனாதிபதி தேர்தலை நடத்தத் தீர்மானித்துள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

SHARE