மஹிந்த முட்டாளா? விக்னேஸ்வரன் முட்டாளா? டக்ளஸ் முட்டாளா? என்பது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தெரியவரும்.

381

நேற்றையதினம் (12.102014) கிளிநொச்சியில் இடம்பெற்ற 20,000 பேருக்கு காணி உரிமைப்பத்திரம் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு, வடமாகாணசபை உறுப்பினர்களுக்கெதிராக நையாண்டி பேச்சுக்கள் பேசப்பட்டன. வைக்கோல் பட்டறை நாயென மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

5642-620x264அதுமட்டுமல்லாது விக்னேஸ்வரன் ஒரு முட்டாள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில்; ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இந்நிலையில் தாம் வெற்றிபெறவேண்டும் என்கின்ற நோக்கத்தோடு ஜனாதிபதி அவர்கள் வடபகுதியில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு, காணி உரிமைப்பத்திரங்களை வழங்கினாலும், விதவைகளுக்கு பணம் வழங்கினாலும், முள்ளிவாய்க்கால் விவகாரத்தினை என்றும் மக்கள் மறக்கப்போவதில்லை.
தமிழ் மக்களின் உரிமையை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னெடுத்துவரும் அபிவிருத்தியினால் வென்றெடுக்கமுடியாது. சுயநிர்ணய உரிமை என்ற வரையறைக்குள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் வடகிழக்கினை இணைத்தல் போன்ற விடயங்களில் அக்கறை கொண்டால் மாத்திரமே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரையும் தமிழ் மக்களின் மனங்களையும் வென்றெடுக்கமுடியும். இதற்கு முன் இடம்பெற்ற வடமாகாணசபைத்தேர்தலின் பொழுதும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டிருந்தார்.

இறுதியில் அவரால் வடமாகாணசபையினைக் கைப்பற்றமுடியாமல் போனது. இதுபோன்றதொரு நிலையே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சந்திக்கநேரிடும். அதன் பின் யார் முட்டாள் என்கின்ற நிலை தெரியவரும்.

SHARE