மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

130
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட சலுகைகள் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெற்ற ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் விசேட சலுகைகளுடன் தேர்தல் களத்தில் செயற்படுவதாகவும், இது ஏனைய சக வேட்பாளர்களுக்கு பாதிப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்து அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று மஹிந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான மனுவை புதிய சமசமாஜக் கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் சானக பெரேரா கடந்த ஜூலை மாதம் 17ம் திகதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கான விசாரணையே இன்று இடம்பெறவுள்ளது.

SHARE