மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இறுதி பகுதியில் பிரதமராக இருந்த டி.எம். ஜயரத்னவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட பதவி

378

 

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இறுதி பகுதியில் பிரதமராக இருந்த டி.எம். ஜயரத்னவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

jayaratna_my3_001

ஜனாதிபதியின் மூத்த ஆலோசகராக முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ராஜபக்ச ஆட்சியின் போது இந்நாட்டிற்கு கொண்டு வந்த பாரிய ஹெரோயின் போதை பொருள் 260 கிலோ தொடர்பில் முன்னாள் பிரதமர் ஜயரத்னவின் பெயரும் தொடர்புபட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE