செம்மணிப்புதைகுழியின் கதாநாயகியும், முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் அராஜகத்திற்கு முடிவு கட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார். சர்வாதிகார ஆட்சியை இந்நாட்டில் கொண்டுவருவதற்கு மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட அனைத்துத் திட்டங்களும் எம்மால் முறியடிக்கப்பட்டது. அதேபோன்று தேர்தலில் மஹிந்த அவர்கள் தோல்வியினை அடைவார். தோல்வியை ஒத்துக்கொள்ளாது பல்வேறு வன்முறைகளில் ஈடுபடுவாராகவிருந்தால், அதற்கும் ஒரு திட்டம் வைத்திருக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.