மாகாண சபை உறுப்பினர்கள் 10 மில்லியன் ரூபா வரை பணத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்து வழங்க முடிவு

380

basil_CIஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ளும் ஆளும் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாவை வழங்க பிரச்சார நடவடிக்கைக்கு பொறுப்பான அமைச்சர் பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ அண்மையில் மாகாண சபை உறுப்பினர்களை அலரி மாளிகைக்கு அழைத்து இத் தகவலை தெரிவித்துள்ளார்.

மாகாண சபை உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் தொகுதிகளில், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காத கட்சியினரை சந்தித்து அவர்களின் தேவைகளை அறிந்து, தொலைக்காட்சி, தையல் இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி உட்பட ஏனைய வீட்டுத் தளபாடங்களை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டுகளுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரச்சார பிரிவு பணத்தை செலுத்தும்.

மாகாண சபை உறுப்பினர்கள் 10 மில்லியன் ரூபா வரை பணத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்து வழங்க முடியும்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்த யோசனைக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இணங்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

SHARE