மாங்குளத்தில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் மக்களால் நையப்புடைப்பு.

117

 

முல்லைத்தீவு மாங்குளத்தில் கடைக்கு பொருட்களை வாங்கச்சென்ற

சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்யும் நோக்கோடு கையைப்பிடித்து

இழுத்த சந்தேகத்தில் பொதுமக்களால் ஒருவர் நையப்புடையப்பட்டு மாங்குளம்

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நேற்று (23.8)

இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

மாங்குளம் கல்குவாரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியொருவர்

கடையில் பொருட்களை வாங்குவதற்காக சென்ற சமயம் அப்பகுதியில் இருந்த

இருவர் அச் சிறுமியின் கையை பிடித்து இழுத்துள்ளனர்.

இதனை அவதானித்த பொது மக்கள் அவ்விடத்திற்கு விரைந்து சென்ற போது

அங்கிருந்த ஒருவர் தப்பியோடிவிட ஒருவர் பொது மக்களால் மடக்கி

பிடிக்கப்பட்டுள்ளார். அவரை பொது மக்கள் கடுமையாக தாக்கிய நிலையில்

குறித்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் என அடையாளம் கண்டுள்ளனர்.

இதனையடுத்து அந் நபரை மாங்குளம் பொலிஸாரிடம் பொது மக்கள்

ஒப்படைத்துள்ளனர்.

SHARE