மாங்குளத்தில் பஸ் விபத்து 4 பேர் பலி 17 பேர் படுகாயம்;;

317

 

மாங்குளத்தில் பஸ் விபத்து 4 பேர் பலி 17 பேர் படுகாயம்;;;:

மாங்குளம் கிழவன்குளம் பகுதியில் இன்று அதிகாலை 4.00 மணியளவில்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த குளிரூட்டப்பட்ட சொகுசு

பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வண்டியின் மீது மோதி

விபத்துக்குள்ளானது.

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed

இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் படுகாயமடைந்தனர். பேருந்தின்

சாரதியின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளதுடன் விபத்தில் பலியானவர்

யாழ்ப்பாணம் நாவலர் வீதியை சேர்ந்த ஜெகநாதன் இதயஜோதி வயது 50 என

அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகாயமடைந்தவர் இறந்தவர்களில்; 14 ஆண்களும் 7

பெண்களும் உள்ளடங்குவதுடன் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து குறித்து தெரியவருவதாவது மாங்குளம் கிழவன்குளம் ஏ9 வீதியில்

யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்

ஏற்றியிருந்த டிப்பர் வண்டியின் பின் பக்கத்தில் கொழும்பிலிருந்து

யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் சொகுசு பேருந்து மோதி

விபத்துக்குள்ளானதாக நேரில் சம்பவத்தை கண்ட பொது மக்கள் தெரிவித்தனர். டிப்பர்

வாகனத்தின் சாரதி மாங்குள பொலிசில் சரணடைந்துள்ளதாக மாங்குள

போக்குவரத்துபொலிசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணையை மாங்குள

பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE