மாணவர்கள் சகல துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்!- வட மாகாண முதலமைச்சர்

145

மாணவர்கள் சமுதாயத்திலுள்ள அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையினால் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும்  நடமாடும் சேவை முல்லைத்தீவில் இன்று நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முதலமைச்சர் உரையாற்றினார்.

மக்களோடு இணைந்து குறைபாடுகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் நாங்கள் உங்களை தேடி வந்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடமாடும் சேவையில் மக்களுக்கு அத்தியாவசியமான மாகாண மற்றும் மத்திய அமைச்சுக்கள் சார்ந்த திணைக்கள சேவைகள் மற்றும் மாகாண அமைச்சு சேவைகள் இன்றைய தினம் வழங்கப்படுகின்றது.

முதலமைச்சர் அலுவலகம் மற்றும் ஒவ்வொரு அமைச்சுக்களுக்குமான அலுவலகங்கள் திறக்கப்பட்டு இந்த நடமாடும் சேவை நடைபெறுகின்றது.

மேலும் குறித்த சேவை இன்றைய தினம் மாலை வரையில் நடைபெறும். இன்றைய நடமாடும் சேவையினை முதலமைச்சர் திறந்து வைத்ததுடன் மக்களுக்கான காணி உறுதிகள் மற்றும் உடு புடவைகளையும் வழங்கிவைத்தார்.

SHARE