மாத்தறை நகர குழு மோதல் தொடர்பில் மங்கள சமரவீரவுக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள்

410

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது சட்டத்தரணியுடன் சென்று சற்று முன்னர் மாத்தறை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

மாத்தறை நகர குழு மோதல் தொடர்பில்வுக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள் இருப்பின் அவர் உள்ளிட்ட 11 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி மங்கள சமரவீரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தென் மாகாண சபை உறுப்பினர் மங்கள பிரியந்தவும் பொலிஸில் ஆஜராகியுள்ளார்.

இதனால் மாத்தறை பொலிஸ் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

SHARE