மாவீரர் நாள் நினைவேந்தலில் ஈடுபட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

38

 

வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நீதிமன்ற உத்தரவு இன்றையதினம் (29.11.2023) வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர்,அவரது மகன் மற்றும் சாரதி ஆகிய மூவரும் கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 3 பேரையயும் 72 மணித்தியாலயம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியை பெற்று தடுத்துவைத்தனர்.

இந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 பேரையும் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

SHARE