மிகுந்த ஏமாற்றம்.. வலிமையுடன் திரும்பி வருவோம்: சஞ்சு சாம்சன்

17

 

டெல்லி அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பேசிய ராஜஸ்தான் அணித்தலைவர் சஞ்சு சாம்சன், மீண்டும் வலிமையுடன் திரும்பி வருவோம் என தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

ஹெட்மையர் இல்லாதபோதும் அஸ்வின் மற்றும் படிக்கலின் சிறப்பான ஆட்டத்தினால் ராஜஸ்தான் அணி நல்ல ஸ்கோரை எட்டியது. ஆனால் பீல்டிங் சொதப்பல், பந்துவீச்சு சரியில்லாததால் படுதோல்வியை சந்தித்தது.

மிகுந்த ஏமாற்றம்.. வலிமையுடன் திரும்பி வருவோம்: சஞ்சு சாம்சன்

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய அந்த அணியின் தலைவர் சஞ்சு சாம்சன், ‘நாங்கள் இன்னும் 10 முதல் 15 ஓட்டங்கள் கூடுதலாக எடுத்திருந்தால் போட்டியை கடினமாக்கியிருக்கலாம். இது மிகவும் ஏமாற்றம் தரும் இரவு. நாங்கள் சில ஓட்டங்கள் மற்றும் விக்கெட்டுகள் குறைவாக இருந்தோம். தோல்விகளுக்கு பிறகு வலிமையாக திரும்புவது முக்கியம். அடுத்த ஆட்டத்தில் அதுதான் எங்கள் கவனம். ஹெட்மையரை விரைவில் அணிக்கு கொண்டு வருவோம் என நம்புகிறோம்’ என தெரிவித்தார்.

SHARE