மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளை தடுத்து நிறுத்துவதற்கு முன்னணி அமைச்சருக்கு லஞ்சமாக 30 கோடி ரூபாவை தர முன்வந்தனர் என அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

368

 

 

மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளை தடுத்து நிறுத்துவதற்கு முன்னணி அமைச்சருக்கு லஞ்சமாக 30 கோடி ரூபாவை தர முன்வந்தனர் என அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின் முன்னர் பெருந்தொகை ஆயுதங்களுடன் கப்பல் (மகாநுவர) ஒன்று இலங்கைக்கு வந்தது. இந்த ஆயுதங்கள் தேர்தலில் தான் தோற்றால் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷ இராணுவப் புரட்சி மூலம் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்கு கொண்டு வரவே இறக்குமதி செய்யப்பட்டன என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்தக் கப்பல் குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே முன்னணி அமைச்சருக்கு கப்பல் குறித்த விசாரணைகளை நிறுத்த 30 கோடி ரூபாவை தர முன்வந்தனர் என அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். எனினும் இது குறித்த விசாரணைகள் நிறுத்தப்படாது என்றும் இன்னும் இரு வாரங்களுக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்றும் இதன் பின்னர் மக்களுக்கு இது தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

SHARE