மின்னல் வேகத்தில் பாய்ந்து கோல் அடித்த ரொனால்டோ! காலிறுதியில் அல் நஸர்

31

 

AFC சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அல் நஸர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அல் ஃபெய்ஹ அணியை வீழ்த்தியது.

ஒடாவியோ கோல்
Al -Awwal மைதானத்தில் நடந்த AFC சாம்பியன்ஸ் லீக் தொடர் போட்டியில், ரொனால்டோவின் அல் நஸர் (Al Nassr) மற்றும் அல் ஃபெய்ஹ (Al Feiha) அணிகள் மோதின.

ஆட்டத்தின் 17வது நிமிடத்திலேயே அல் நஸரின் ஒடாவியோ (Otavio) அபாரமாக தலையால் முட்டி கோல் அடித்தார்.

அதன் பின்னர் 37வது நிமிடத்தில் Free kickயில் இருந்து வந்த பந்தை ரொனால்டோ தலையால் முட்டினார். ஆனால் அது கோலாக மாறவில்லை.

அதனைத் தொடர்ந்து 53வது நிமிடத்தில் விரைவாக பந்து கடத்திச் சென்ற ரொனால்டோ, கோல் போஸ்ட்டை நோக்கி ஷூட் செய்ய கோல் கீப்பர் காலால் தடுத்தார்.

ரொனால்டோ பாய்ந்து கோல்
இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் ஒருவழியாக 86வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்தார். இம்முறை கோல் கீப்பர் குறுக்கே வந்தும், அவரிடம் பந்தை விடுக்காமல் கோல் ஆக மாற்றினார்.

அல் ஃபெய்ஹ அணியால் இறுதிவரை கோல் அடிக்க முடியாததால் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் அல் நஸர் அணி கால் இறுதிக்கு தகுதிபெற்றது. மார்ச் 4ஆம் திகதி நடைபெற உள்ள Al Ain அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் மோத உள்ளது.

இதற்கிடையில் ரொனால்டோ தனது பதிவில், அடுத்த கட்டத்திற்கு முன்னேறி விட்டோம், ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி! என தெரிவித்துள்ளார்.

SHARE